இவ்வருடம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பில் பரிசீலிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றைய தினம் (03) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய எம்பிக்கள் பலர், இரண்டாவது முறையாக தோற்றி பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு இன்னும் 98 நாட்கள் மாத்திரமே உள்ளதாக சுட்டிக்காட்டினர்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இந்த முன்மொழிவு தொடர்பில் பரீட்சை திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், அதன் நியாயத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு தன்னால் முடிந்த உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.