கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (MLSC) நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 முதல் மீலாதுன் நபி  சிறப்பு நிகழ்ச்சிகள் காலை 8.30 முதல் மாலை 5.00 மணி வரை MLSC நிறுவன மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அதன் தலைவரும், சியன ஊடக வட்டத்தின் தலைவருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் தெரிவித்தார். 

இதன்போது பிரதம பேச்சாளராக கல்விமான் கலாநிதி ரவூப் ஸெய்ன் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவாற்றுவார். அன்றைய தினத்தில் காலை 8.30 மணி முதல் பிரதேச பாடசாலைகளான கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம், கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயம் மற்றும் உடுகொடை அறபா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கிடையிலான விவாதப்போட்டி ஒன்றும் நடைபெறவுள்ளது.

காலை 10.30 மணி முதல் கலாநிதி ரவூப் ஸெய்னின் உரை இடம்பெறும். 11.30 மணி முதல் மௌலித் மஜ்லிஸ் அல்ஹாஜ் மௌலவி இஜ்லான் (காஸிமி) தலைமையில் நடைபெறும். அதனை தொடர்ந்து பகல் போசணம் நடைபெறும். அஸர் தொழுகையினை தொடர்ந்து விவாதப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், அதன் போது பிரதம அதிதியாக அல் ஹிமா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நூருல்லாஹ் (நளீமி) கலந்து கொள்ளவுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். 

அத்துடன், விஷேடமாக புனரமைக்கப்பட்ட MLSC நூலகமும் இதன்போது திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.