தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. இதன்படி அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களும் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

அங்கு 15 வயது நிறைவடைந்தவுடன் முதல் தடவையாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் போது 200 ரூபா கட்டணமாக செலுத்தப்பட வேண்டும். இதற்கு முன், 100 ரூபாய் கட்டணம் இருந்தது. தொலைந்து போன அடையாள அட்டைக்குப் பதிலாக தேசிய அடையாள அட்டையின் நகலைப் பெறுவதற்கு 1,000 ரூபா புதிதாகச் செலுத்தப்பட வேண்டும். முன்பு அந்த சேவைக்கு செலுத்த வேண்டிய கட்டணம் 500 ரூபாயாக இருந்தது.

புதிய திருத்தத்தின் பிரகாரம் தேசிய அடையாள அட்டையின் திருத்தப்பட்ட பிரதியை வழங்குவதற்கு 500 ரூபா கட்டணமாக அறவிடப்படவுள்ளது. முன்னதாக தேசிய அடையாள அட்டையின் திருத்தப்பட்ட பிரதி வழங்குவதற்கு 250 ரூபா மாத்திரமே அறவிடப்பட்டது. புதிய திருத்தத்தின் பிரகாரம், காலாவதியான தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக புதிய தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கு 200 ரூபா அறவிடப்படவுள்ளது.

நவம்பர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.