எரிபொருள் விலை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 92 ஒக்டோன் பெட்ரோலின் விலை 40 ரூபாவினாலும், ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, பெட்ரோல் 92 இன் புதிய விலை லீற்றருக்கு ரூ.370 ஆகவும், ஒட்டோ டீசல் லீட்டருக்கு ரூ.415 ஆகவும் இருக்கும். மற்ற பெட்ரோலிய பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.