நாடாளுமன்ற உறுப்பினர்களின் மருத்துவக் காப்புறுதித் தொகையை 10 இலட்சம் ரூபாவாக உயர்த்துவதற்கான யோசனையை அமைச்சரவைக்கு முன்வைக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.

நாடாளுமன்ற அவைக் குழுவில் சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெறும் மருத்துவக் காப்புறுதி இரண்டு இலட்சம் ரூபாவாகும்.

தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக அனைத்து மருத்துவ சேவை கட்டணங்களும் அதிகரித்துள்ள நிலையில் உரிய காப்புறுதித் தொகை போதுமானதாக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து சபாநாயகர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.,

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.