இலங்கையின் தென் மாகாணம், தென் மேற்குப் பிரதேசம் மேல் மாகாணம் போன்ற பகுதிகளில் வாழும் முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான உணவு கிடுகு ஆகும். ரபீஉல் அவ்வல் மற்றும் ரபீஉல் ஆகிர் மாதங்களில் கிடுகு சாப்பாடு அதிகளவில் விநியோகிக்கப்படுகிறது. 

சில இடங்களில் "கிடுகு" என்ற பெயர் "கிடுவ்" , "கிடுவு" என்று திரித்து பயன் படுத்தப்படுகிறது. உண்மையில் "கிடுகு" என்பது தூய்மையான தமிழ் சொல்.  கிடுகு எனப்படுவது, தென்னையின் ஓலையை நெடுக்குவாட்டில் பிளந்து, பின்னிப் பெட்டி வடிவில் உருவாக்கப்பட்ட கூடையாகும்.  இதில் சாப்பாட்டை வைத்து அதனை விநியோகிக்கும் நடைமுறை இலங்கைச் சோனகர்களின் மிக முக்கிய உணவு முறை அடையாளமாகும்.

கிடுகில் நெருப்பில் இலேசாக வாட்டப்பட்டு விரிக்கப்பட்ட வாழை இலையில்  சோறு, பருப்பு, இறைச்சி, களியா (கத்தரி மற்றும் வாழைக்காய்) அச்சாறு போன்ற கறி வகைகள் அடங்கியிருக்கும். (இப்போது பல பகுதிகளிலும் வேறுபட்ட கறி வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.) கிடுகு சாப்பாட்டின் சுவைக்கு அதன் மணம் வழங்கும் உந்துதல் தனித்துவமானது.  

இன்று பல்வேறு முஸ்லிம் கிராமங்களிலும்  பள்ளிவாசல், பாடசாலைக் கட்டடங்கள் பொதுப்பணிகள், சத்திர சிகிச்சைகள் போன்ற பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காகவும் கிடுகு விநியோகம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Fazhan Nawas

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.