குறைந்த எடை கொண்ட பாண் விற்பனை தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை நேற்று (22) கொழும்பின் பல பகுதிகளில் சோதனைகளை மேற்கொண்டிருந்தது.

பல பேக்கரிகள் மற்றும் கடைகள் பாணின் விலையைக் காட்டவில்லை, பாணின் சரியான எடை இல்லை மற்றும் வணிக இடத்தில் தராசு இல்லை என்று வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் இரண்டு தடவைகள் கோதுமை மாவின் விலை 110 ரூபாவினால் குறைக்கப்பட்ட போதிலும், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அதிக விலை கொடுத்தாலும் வாடிக்கையாளருக்கு குறைந்தபட்சம் 450 கிராம் எடையுள்ள பாண் கிடைப்பதில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதேவேளை, குறைந்த எடை கொண்ட பாண்களை விற்பனை செய்யும் கடைகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு அளவீட்டு அலகுகள் மற்றும் தரநிலை சேவைகள் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

011 2 18 22 50 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என அதன் பணிப்பாளர் நாயகம் திரு.சுஜீவ அக்குரந்திலக்க குறிப்பிட்டுள்ளார். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.