கொழும்பில் பெண்களைப் பயன்படுத்தி கொள்ளை மோசடியில் ஈடுபட்டு வந்த முக்கிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் வைத்திருந்ததால், அவரைக் கைது செய்ய பொலிஸ் அதிகாரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர் என்று கூறப்படுகின்றது.

பயணிகளிடம் கைவரிசை காட்டும்  இந்த நடவடிக்கையில் ஈடுபடும் பெண்கள் சில காலமாக மக்களுடன் பயணிக்கும் போது அவர்களின் பணத்தைக் கொள்ளையடித்து வருகின்றனர்.

கைதான சந்தேகநபர் புறக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.