முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதற்கான கையெழுத்து வேட்டையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   நவம்பர் 18ம் திகதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளாகும். இந்த நிலையில் அவருக்கு பிறந்த நாள் பரிசாக பிரதமர் பதவியை பெற்றுக் கொடுப்பதற்கு மொட்டு கட்சி உறுப்பினர்கள் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.      இதன் பொருட்டு அதிகப்படியான எம் பீக்களின் கையெழுத்துக்களை பெற்றுக் கொள்வதற்கான முஸ்தீபுகளும் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன.  அரகல போராட்டத்துக்குப் பிறகு மஹிந்த ராஜபக்ஷ நேற்று சனிக்கிழமை களுத்துறையில் இடம்பெற்ற கட்சி கூட்டமொன்றின்றில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.