இன்றைய (05) பாராளுமன்ற அமர்வில் ஆளும் கட்சியின் சகல உறுப்பினர்களும் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் நேற்றைய தினம் ஆளும் கட்சியின் சகல உறுப்பினர்களுக்கும் விஷேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளில் திருத்தம் மேற்கொள்ளல் தொடர்பான விவாதத்தின் போது, கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைப்பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என்று திருத்தம் ஒன்றை முன்வைத்து அது தொடர்பில் வாக்கெடுப்பு ஒன்றை கோருவதற்கு எதிர்க்கட்சி தயாராகிக்கொண்டு இருப்பதாக ஆளும் கட்சிக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.