இத்திஹாத் அஹ்லுஸ் ஸுன்னா வருடாந்த மாநாடும், அதன் தலைவர் டாக்டர் பஹ்மி இஸ்மாயில் எழுதிய "ஷாதுலிய்யா தரீக்கா வரலாறு" எனும் ஆங்கில நூல் வெளியீட்டு விழாவும் அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டப ஓகிட் மண்டபத்தில் அதன் ஸ்தாபக தலைவர் அல்ஹாஜ் தலாத் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.

 இந்நிகழ்வில் முஸ்லிம் சமய விவகார திணைக்கள பணிப்பாளர் அல்ஹாஜ் அன்ஸார் இப்றாஹிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

காலி அலியா இஸ்லாமிய சட்டக் கல்லூரி பணிப்பாளர் மூத்த கலீபதுஷ் ஷாதுலி மெளலவி அல்ஹாஜ் முஹம்மது ஸுஹுர் பாரி, ஜனாதிபதி சட்டத்தரணியும் ஷாதுலிய்யா தரீக்காவின் மூத்த இஹ்வானுமான ராஸிக் ஸரூக், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பொருளாளர் கலாநிதி மெலளவி அஸ்வர் (அஸ்ஹரி), தரீக்காக்கள் உயர் கவுன்ஸில் செயலாளரும் ஜம்மியதுல் உலமா சபை உறுப்பினருமான முப்தி முஸ்தபா ரஸா, உம்மு ஸவாயா அஜ்வாத் அல்பாஸி அரபுக் கல்லூரி  அதிபர் மெளலவி அஹமத் (மஹ்ழரி), தெவட்டகஹ மஸ்ஜித் தலைவர் அல்ஹாஜ் ரியாஸ் ஸாலி உட்பட உலமாக்கள், பிரமுகர்கள், இராஜதந்திரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

(படங்கள்: பேருவளை நிருபர்)கருத்துரையிடுக

Blogger இயக்குவது.