வாதுவையில் அமைந்துள்ள 5 நட்சத்திர ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் இருநு்து வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவரே இன்று (18) காலை இவ்வாறு ஹோட்டலில் உள்ள நீச்சல் தடாகத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (17) மாலை ஹோட்டலுக்கு வருகை தந்த 43 வயதான குறித்த வெளிநாட்டவர் இன்று காலை நீச்சல் தடாகத்தில் இறந்தநிலையில் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.