நடுத்தர வருமானம் பெறும் நாடான இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட ஏழ்மை நாடாக வகைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டின் தனிநபர் வருமானம் நாளாந்தம் குறைந்து வருவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.