பேராதனை பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் 25 வயதுடைய மாணவன் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

மாணவன் விடுதியில் இல்லை என பேராதனை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.