மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர், கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் வர்த்தக அமைச்சு மற்றும் மகாபொல நிதியத்துடன் கலந்துரையாடப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்காக தற்போது மகாபொல விசேட புலமைப்பரிசில் திட்டத்தினூடாக தற்போது மாதாந்தம் 5,500 ரூபா வழங்கப்படுகின்றது.

மகாபொல சாதாரண திட்டத்தினூடாக மாணவரொருவருக்கு மாதாந்தம் 5,000 ரூபா வழங்கப்படுவதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

பணவீக்கம் அதிகரித்துள்ள காரணத்தினால் இந்த கொடுப்பனவுகளை 50 வீதத்தால் அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர், கலாநிதி சுரேன் ராகவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.