(அஷ்ரப் ஏ சமத்)
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தினால் கடந்த 15.10.2022 சனிக்கிழமை வெள்ளவத்தை லில்லி அவெனியு உள்ள எம்.ஐ.சி.எச். இல் உள்ள மண்டபத்தில் சில உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் வாலிப முன்னணியின் நிர்வாக உறுப்பினர்களுக்கான செயலமா்வொன்று நடைபெற்றது .
இச் செயலமர்வில் உள்ளூராட்சி முறைமைகள், உள்ளூராட்சி உறுப்பினர்களின் சமூக வகிபாகம், மீளாய்வும் முன்னெடுப்புக்கள் என்ற தலைப்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.
இச்செயலமர்வில் கொழும்பு முன்னாள் மேயா் உமா் காமில், முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவா் என்.எம்.அமீன், முஹம்மது அஜிவதீன், தலைவா் லுக்மான சஹாப்தீன் , சாம் நவாஸ் ஆகியோறும் உரையாற்றினாா்கள். முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரும் கலந்து கொண்டார்.