TNT எனும் இந்திய எக்ஸ்பிரஸ் கூரியர் சேவையின் மீது தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திரம் குஸல் மெண்டிஸ் கவலை தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து தனது புதிய கிரிக்கெட் கியர் வருவது தாமதமாக உள்ளது, அது இல்லாமல் தான் சிரமப்பட்டு வருவதாகவும் , அவரது பேக்கேஜ் இருக்கும் இடத்தை இன்னும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கடந்த சில நாட்களாக இன்று டெலிவரி செய்யப்படும் என்று நாட்களை கடத்திக் கொண்டுள்ளார்கள் என்றும் குஸல் தனது டுவிட்டரில் இன்று டிவிட் பண்ணியுள்ளார்.
இருபதுக்கு இருபது உலகக்கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் குஸல் இவ்வாறான நிலையில் இருப்பதால் இலங்கை அணியில் அவரது ஆட்டம் பாதிக்கப்படுமோ என்று இலங்கை அணியின் ரசிகர்கள் கவலையாக உள்ளார்கள்.