இன்று (01) சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

சிறுவர்களுக்கு இடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காக கோண்டு  14.12.1954 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்று முதல் இன்று வரை உலகம் முழுவதும் ஒக்டோபர் 01 ஆம் திகதி சிறுவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

மேலும், இன்று உலக முதியோர் தினமும் அனுஷ்டிக்கப்படுகிறது.

1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக உலக முதியோர்  தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.