ஆர்ப்பாட்டங்களின் போது சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின்படி பாரிய குற்றமாகும் என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் சிறுவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது அ5தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

“குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உடல், மன, தார்மீக, மத மற்றும் சமூக ரீதியில் முழு வளர்ச்சியை உறுதி செய்யவும், சுரண்டல் மற்றும் பாகுபாடுகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் நலனை மேம்படுத்த அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளும். அரசியலமைப்பின் 27 வது பிரிவு மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பது ஒரு அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு என்பதை வலியுறுத்தியது.

சிறுவர் பாதுகாப்பு பொறுப்புகளை இலங்கை காவல்துறை மற்றும் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு முகவர் நிறுவனத்திடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிறுவர்களை பாலியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு எதிராக சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

பெற்றோரிடமிருந்து பிரிந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் குடியேறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் உள்ள சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தினார்.

சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், சிறுவர் இல்லங்களில் உள்ள விசேட தேவையுடைய சிறுவர்களை இனங்கண்டு அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

சிறுவர் இல்லங்களுக்கு பொறுப்பான பாதுகாவலர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதன் மூலம் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தவிர்

க்க முடியும் எனவும் தெரிவித்தார். கருத்துரையிடுக

Blogger இயக்குவது.