நேற்று இரவு குருணாகல் வெல்லவ பகுதியில் தடம் புரண்ட சரக்குப் புகையிரதத்தை மீட்டதனைத் தொடர்ந்து தற்போது வடக்குப் பாதைக்கான புகையிரதப் போக்குவரத்து சீராகியுள்ளதாக இலங்கை புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்றிரவு மேற்படி புகையிரதம் வெல்லவ பகுதியில் தடம் புரண்டதைத் தொடர்ந்து காங்கேசன்துறையிலிருந்து வரும் புகையிரதங்கள் மாகோ சந்தி வரையிலும் கொழும்பு கோட்டையில் இருந்து வரும் புகையிரதங்கள் குருணாகல் புகையிரத நிலையம் வரையிலுமே சேவையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை நிலமை சீரானதைத் தொடர்ந்து வடக்குப் பாதைக்கான புகையிரப் போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.