சுங்கத்தினால் பல்வேறு காரணிகளின் அடிப்படையில்

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கொள்கலன்களில் உள்ள ஒரு மில்லியன் கிலோகிராம் அரிசியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.


தாமதக் கட்டணம் செலுத்தப்படாமை காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 79 கொள்கலன்களில் இந்த அரிசி தொகை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.


துறைமுகம் மற்றும் சுங்கப்பிரிவின் அதிகாரிகளுடன் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.


அண்மையில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கொழும்பு துறைமுகத்தில் உள்ள இலங்கை சுங்கத்தில் கண்காணிப்பினை முன்னெடுத்திருந்த நிலையில், அது குறித்த விடயங்கள் நேற்றைய கலந்துரையாடலின் போது, அவதானம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.