கஹட்டோவிட்ட பாதிபிய்யா தக்கியாவில் இடம்பெற்ற மௌலித் தமாம் மற்றும் பரிசளிப்பு நிகழ்வு

Rihmy Hakeem
By -
0

 கஹட்டோவிட்ட பாதிபிய்யதுல் காதிரிய்யா தக்கியாவில் ஸுப்ஹான மௌலித் தமாம் நிகழ்வும், பரிசளிப்பு வைபவமும் இன்றைய தினம் (09) தக்கியா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது 12 நாட்களாக ஓதப்பட்டு வந்த கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பெயரிலான ஸுப்ஹான மௌலித் தமாம் செய்யப்பட்டது. 

அதனை தொடர்ந்து தக்கியாவில் நடைபெற்று வரும் பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

நிகழ்வில் உலமாக்கள், பல்வேறு தரீக்காக்களின் அங்கத்தவர்கள், பாதிபிய்யா தக்கியா நிர்வாகிகள், பல்வேறு பிரதேசங்களில் இருந்து வருகை தந்த முரீதீன்கள், முஹிப்பீன்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)