நவ லங்கா நிதஹஸ் கட்சியின் அத்தனகல்ல தேர்தல் தொகுதியிலுள்ள முக்கியஸ்தர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்றைய தினம் (30) அவருடைய ஹொரகொல்ல இல்லத்தில் சந்தித்தார். 

இந்நிகழ்வில் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் அல்ஹாஜ் ருஷ்தி உஸ்மான், அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர்களான யமுனா ரஞ்சனி, சுதர்ஷனி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சாந்த உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் ருஷ்தி உஸ்மானுக்கு அண்மையில் வழங்கப்பட்ட நியமனக்கடிதத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.