(எம்.என்.எம்.அப்ராஸ்)

நாட்டுக்கும் சமூகத்திற்கும் நற்பிரஜைகளை உருவாக்கித் தரும் பொறுப்பு ஆசிரியர்களிடம் மட்டுமே உள்ளது என கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான எந்திரி எம்.எம். எம்.முனாஸ் தெரிவித்தார்.

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரஃப் வித்தியாலய பாடசாலை முகாமைத்துவ குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச ஆசிரியர் தின விழா (06) பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சம்சுதீன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் எந்திரி எம்.எம்.எம்.முனாஸ் அங்கு உரையாற்றுகையில்,

ஒரு தாய் குழந்தையை பிரசவித்தாலும் அக்குழந்தையை உலகிக்கு ஒழுக்கமுள்ள, அறிவுடைய ஒரு நற்பிரஜையாக கொண்டு வரும் பணியினை ஆசிரியர்கள் அற்பணிப்புடன் செய்வதானது பாராட்டத்தக்க விடயமாகும்.

ஒரு ஆசிரியரால் மட்டுமே பல்வேறு துறை சார்ந்தவர்களை உருவாக்க முடியும். எனவே ஆசிரிய பெரும் தகைகள் இத்தினத்தில் மட்டுமல்ல என்றென்றும் நினைவு கூறப்பட வேண்டியவர்கள் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வரும் மெட்ரோ மொலிட்டன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கௌரவ அதிதியாக கல்முனை கல்வி மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிர், சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.என். அப்துல் மலீக், ஆசிரிய ஆலோசகர் ஏ.சஹரூன்,கிராம நிலதாரி எல்.நாஸர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சங்க உறுப்பினர்கள், பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.