இலங்கை இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் "புதிய தலைமுறை விருதுகள்" நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், 2022 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழாவில் Young Emerging Politician "வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதி" எனும் விருதை பேருவலையைச் சேர்ந்த இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதி அமைச்சர் அஹமத் சாதிக் அவர்கள் பெற்றுக்கொண்டார்.


 விருது வழங்கும் விழா அக்டோபர் 29 ஆம் திகதி 2022 அன்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ. ரொஷான் ரணசிங்க மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் கலாநிதி திரான் டி சில்வா ஆகியோர் இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டதுடன் மேலும் பல பிரபலங்கள் அதிதிகளாக கலந்துகொண்டனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.