மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசிக்கும் வீட்டை தமக்குத் தருமாறு முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ முன்பு இருந்த கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள வீட்டின் புனரமைப்புப் பணிகள் முடிவடைந்த பின் முன்னாள் ஜனாதிபதி அங்கு குடியேறவுள்ளார்.
அதன்பின் தற்போது மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையிலிருக்கும் வீட்டை தனக்குத் தருமாறு ஜனாதிபதி அலுவலகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.