நலன்புரி உதவித் தொகை பெறத் தகுதியானவர்களைக் கண்டறியும் அரசின் திட்டத்துக்கான விண்ணப்பங்களுக்கான அழைப்பு ஒக்டோபர் 28ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் “யாரையும் விட்டுச் செல்ல வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரி உதவித்தொகைக்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரலுக்கான இறுதி நாள் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 15-ம் திகதியுடன் முடிவடையும் என்று நலன்கள் அமைப்பு முன்னதாக அறிவித்திருந்தது.

தற்போது முதியோர், ஊனமுற்றோர், சிறுநீரக நோய் வாழ்வாதார உதவிகள் மற்றும் பொது உதவி பெறுவோர், காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்கள், நலத்திட்ட உதவிகளை எதிர்பார்க்கும் அனைத்து பயனாளிகளும் புதிய திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று நலன்புரி பலன்கள் அமைப்பு வலியுறுத்துகிறது.

நலன்புரிப் பலன்கள் அமைப்பின் இணையதளத்தில் ( www.wbb.gov.lk) உரிய விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அல்லாது மாகாண தகவல் மையத்தை 0112 151 481 மற்றும் 1919 என்ற எண்ணில் அழைப்பதன் மூலம் கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

http://www.wbb.gov.lk/ 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.