கடந்த காலங்களில் நாட்டை அழித்தது ராஜபக்சர்கள் இன்றி 16 இலட்சம் அரச உத்தியோகத்தர்களே என தற்போதைய அரசாங்கம் குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும்,இந்த ராஜபக்ச நிழல் அரசாங்கம் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும், எதிர்க்கட்சி என்ற ரீதியில் அந்தக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (3) தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹபராதுவ தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஹபராதுவ தேர்தல் தொகுதி பிரதான அமைப்பாளர் சுமணசிறி லியனகே அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் பெரும்திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.