சமூகத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் ஒரு ஆசிரியர் தெரிவு செய்யப்பட்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள அனைத்துப் பாடசாலைகளில் இருந்தும் ஒரு ஆசிரியர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான செயலமர்வு இன்னும் நடைபெற்று வருகின்றது. எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் உரிய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றோருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.


பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.