நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டுமென்றால் அவரவர் அவரவரின் கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.
ஸ்திரத்தன்மையை அனைவரின் ஒத்துழைப்போடும் ஏற்படுத்தாவிட்டால் நாடு இதே நெருக்கடியில் தான் தொடர்ந்தும் பயணிக்கும் என்ற அவர் நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டுமென்றால் ஊடகங்கள் முறையாக தமது பணிகளை விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று இலத்திரனியல், அச்சு ஊடகங்களை விடவும் சமூக ஊடகங்களாலேயே மக்கள் மத்தியில் அதிகளவிலான பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுகிறது, மக்களுக்கு எப்போதும் சரியான தகவல்களே கொண்டு செல்லப்பட வேண்டும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து சரியாக மக்கள் தெளிவிபடுத்தப்பட வேண்டும்.
இது சர்வதேசம் தழுவிய பிரச்சினையாக காணப்படுகிறது. தமது பொறுப்புக்களை உணர்ந்து அனைவரும் சரிவர செயற்பட வேண்டும் என்றும் அவ்வாறு நடக்காத போது மீண்டும் நாடு பாரிய போராட்டம் ஒன்றுக்கு முகம் கொடுக்கும் என்றும் அவர் நேற்று அமைச்சுகள், ஆளுனர்களின் ஊடக செயலாளர்களை அரசாங்க தகவல் தினைக்களத்தில் சந்தித்து உரையாடும் போதே குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் முன்னாள் சபாநாயகரின் ஆலோசனைப் படி அடுத்த வாரம் மக்கள் சபை ஸ்தாபிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.