கடந்த 1ஆம் திகதி முதல் அமுல்படுதப்பட்ட சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி காரணமாக, அனைத்து வகையான அலைபேசிகள் மற்றும் அதுசார்ந்த துணைக் கருவிகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் என்று அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான ஆண்டு வருமானத்தை ஈட்டும் இறக்குமதியளர்களுக்கு சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிக்கப்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

வரி அதிகரிப்பு காரணமாக, பெரிய இறக்குமதியாளர்கள், சில்லறை வியாபாரிகளுக்கு பொருட்களை விற்கும் போது வரியை சேர்த்துள்ளனர் என்றும் அதனால் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் போது விற்பனையாளர்களும் விலைகளை அதிகரிப்பதாக சங்கம் குறிப்பிட்டது. 

2% சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை அரசாங்கம் அறிவித்த போதும் தயாரிப்புகள் நுகர்வோரை சென்றடைகையில் அந்த வரி கிட்டத்தட்ட 5% ஆக இருக்கும் என்றும் அதன் காரணமாக, அலைபேசிகள் மற்றும் அதுசார்ந்த துணைக் கருவிகளின் விலைகள் அதிகரிக்கப்படுவது உறுதி என்று சங்கம் தெரிவித்தது.  

நாட்டின் பொருளாதாரம் தற்சமயம் குழப்பமான நிலையில் உள்ளதாகவும் அரசாங்கத்தால் வரிகள் மற்றும் கட்டணங்களை அதிகரிக்க முடியும் என்றும் தேசிய பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Tamil mirror

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.