கஹதுடுவ பலகம பிரதேசத்தில் மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி 70 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபரை பொலிஸார் நேற்று (14) பிற்பகல் கைது செய்துள்ளனர்.

கஹதுடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே பலகம பகுதியில் உள்ள பாரிய வீடொன்றுக்கு சிலர் வந்து குழப்பமான முறையில் நடந்து கொள்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபருக்கு பணம் வழங்கப்பட்டதாக கஹதுடுவ பொலிஸாருக்கு ஏற்கனவே பலரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

28 வயதான இந்த நபர் இன்று (15) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.