அக்கரைப்பற்று நுரைச்சோலை வீடமைப்புத் திட்டத்தை புனரமைத்து பொதுமக்களுக்கு கையளிப்பது தொடர்பாக தான் முன்னுரிமையுடன் செயற்படுவதாக இலங்கையிலுள்ள சவூதி அரேபியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அண்மையில் சவூதி அரேபியத் தூதவரைச் சந்தித்தபோதே இது குறித்து தெரிவித்துள்ளார். 

சவூதி அரேபியாவின் உதவியுடன் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டம் சில கடும்போக்கு வாதிகளின் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது. 

சவூதி - இலங்கை உறவில் விரிசலை ஏற்படுத்திய இந்த வீட்டுத் திட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

முஸ்லிம்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டத்தில் பிரதேச இன விகிதாசாரப் படி பகிர்ந்தளிக்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

2000 க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட இந்த வீட்மைப்புத் திட்டம் இப்போது முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையிலுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.