மினுவங்கொட, கமங்கெதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரி56 ரக துப்பாக்கி ஒன்றின் மூலம் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தந்தை மற்றும் இரு மகன்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதுடன், துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மகன்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Adaderana

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.