அந்நிய செலாவணி பற்றாக்குறை : சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது

  Fayasa Fasil
By -
0




கச்சா எண்ணெய் சரக்குகளுக்கான அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் ஒக்டோபர் 07 ஆம் திகதி மூடப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் (CPC) அனைத்துப் பொருட்களுக்கும் போதுமான அளவு இருப்புக்கள் இருப்பதால், சுத்திகரிக்கப்பட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என அவர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான வாராந்த அந்நிய செலாவணி தேவைகளை இலங்கை மத்திய வங்கி (CBSL) வழங்கியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார் .

சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்கனவே சுத்திகரிக்கப்பட்ட 2 பீப்பாய் கச்சா எண்ணெய்க்கான கணக்க்களை செலுத்துவதற்கான அந்நிய செலாவணி பற்றாக்குறையால் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் விளக்கினார்.

கடந்த 10 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் இருந்த 100,000 MT ESPO கச்சா எண்ணெய் CPC க்கு போதுமான அந்நிய செலாவணி கிடைத்தவுடன் இறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)