ஜே.ஆர் தனது மருமகன் தேர்தலில் தோற்று தனது சொந்த அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதியாக வருவார் என நினைத்திருக்க மாட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட சபை உறுப்பினர் டலஸ் அழகப்பெரும பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“44 ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதியான ஜெ. ஆர். ஜயவர்தன அரசியலமைப்பை உருவாக்கும் போது இவ்வாறானதொன்று நடக்கும் என்று நினைத்திருக்க மாட்டார் என்றும் அழஹப்பெரும தெரிவித்தார்.

அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 44 வருடங்களின் பின்னர் ஜே.ஆரின் மருமகன் பொதுத்தேர்தலில் தோல்வியடைந்து தேசியப்பட்டியலில் இருந்து பாராளுமன்றம் சென்று பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பதவியேற்றது அரசியலமைப்பின் காரணமாகவே என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான திரிபுகள் ஏற்படாத வகையில் நாட்டு மக்களை ஏமாற்றாத அரசியலமைப்பை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.