நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் சரிவைக் கருத்தில் கொண்டு, சீன குடும்பங்களின் வேலைப் படை அதிகரித்து வருவதாகவும், அத்துடன் சீனர்கள் தமது அன்றாட செலவுகளைக் குறைப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

செலவினங்களின் அதிகரிப்பு காரணமாக, பல சீன குடியிருப்பாளர்கள் பொழுதுபோக்கு மற்றும் பயணத்திற்கான செலவினங்களைத் தவிர்த்து வருவதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
வெளிநாட்டு ஊடகங்களின்படி, வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரம் சீன மக்களிடையே நெருக்கடி நிலையொன்றை உருவாக்கியுள்ளது மற்றும் அவர்களை விநோதப் பயணம் செய்வதிலிருந்து அவர்களை தடுக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது .

வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரம் மட்டுமல்ல, நாட்டில் கடுமையான கோவிட் தடுப்பு கொள்கையும் சீன மக்களை சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு போன்றவற்றிலிருந்து விலகி இருக்க செய்வதில் செல்வாக்கு செலுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய தினத்திற்காக ஒக்டோபர் 1 ஆம் திகதி தொடங்கிய சீனாவில் ஒரு வார விடுமுறைக்கு அந்நாட்டு மக்களின் பயணச் செலவு 26 சதவீதம் குறைந்து 287 பில்லியன் யுவானாகவும், இது பத்தில் 2 ஆகவும் குறைந்துள்ளதாக கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் சீன மக்கள் தங்களது பயணச் செலவைக் கணிசமாகக் குறைத்துள்ள காலம் இது என்று சீன அதிகாரிகள் கூறுகின்றனர்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.