மகரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியின் நம்பிக்கையாளர்களாக நீண்ட காலமாக பணி புரிந்துவரும் மூவர் நீக்கப்பட்டு அந்த மூன்று வெற்றிடங்களில் இரண்டுக்கு இரு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அல்ஹாஜ் நாவஸ் கபூர், சுபைர் கபூர், ஜெஸ்மி ஆரிப் ஆகிய மூவர்களதும் இடதுக்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கபூரிய்யாவின் வரலாற்றிலேயே என்றுமில்லாதவாறு தற்போதைய நிர்வாகம் இரு பெண்களை நியமித்துள்ளது. 

சர்ச்சைக்குரியவராக கருதப்படும் அஸ்மத் கபூரின் மனைவி சித்தி சிஹாரா ஏ காதரும், ஜமீலா ஹாஸிம் அப்துல் காதர் ஆகிய இருவருமே நியமிக்கப்பட்ட பெண்களாவர். 

இதேநேரம் கபூரிய்யா தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவு குறித்து மேன்முறையீடு செய்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் கடந்த 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.