முன்னாள் பிரித்தானிய இராணுவ விமானிகளின் நிபுணத்துவத்தைப் பெறுவதற்கு சீனா பெருமளவிலான பணம் மற்றும் முயற்சிகளைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரித்தானியா அதனை உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக இதனை கருதுவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து தற்போது அந்த முயற்சிகளை தடுக்க பிரித்தானியா நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய அரச இராணுவத்தின் முன்னாள் விமானிகளை சீனா ஏற்கனவே பணியமர்த்தியுள்ளதாகவும், தமது போர் விமான விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்தத் தகவல்களின்படி, சீனா தனது நாட்டின் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்துள்ள பிரிட்டிஷ் ரோயல் ஆமியின் முன்னாள் விமானிகளின் எண்ணிக்கை 30-க்கும் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.