இலங்கையின் கடற்பரப்பின் ஊடாக இடம்பெறக் கூடிய பயங்கரவாத சாத்தியக் கூறுகளை சமாளிப்பதற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு ஒன்றை அமைக்குமாறு தமிழக அரசாங்கத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணியான பி.ஜெகன்நாத் என்பவரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை, பொருளாதார நெருக்கடி காரணமாக மீண்டும் செயற்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயங்கரவாதிகள் இலங்கையில் இருந்து இந்தியாவை தாக்கக் கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாநில அரசாங்கத்தை இழிவுப்படுத்துதல், வதந்தியை பரப்புதல் மற்றும் அச்சத்தை ஏற்படுத்துதல் என்பவற்றுக்காக குறித்த பொது நல வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.