நீர்ப்பாசன திணைக்களம் இன்று (14) இரவு 08 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில்,
எதிர்வரும் 3 முதல் 48 மணித்தியாலங்களுக்குள் திவுலபிடிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, ஜா எல, மினுவாங்கொட, கடான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட அத்தனகல்ல ஓயா மற்றும் உருவல் ஓயா ஆகிய ஆறுகளை அண்டிய தாழ் நில பிரதேசங்களில் சிறு அளவிலான வெள்ளம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.