இன்றிரவு (17) 09.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
92 ஒக்டேன் பெற்றோலின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 370 ரூபாவாகும்.
லங்கா டீசலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 415 ரூபாவாகும்.