பல சவால்களை கடந்து, Online Shopping, D2D Education, Event Management, DTH Recharge, Gift Iteams என பல் துறைகளில் காலத்தின் தேவையை பூர்த்தி செய்து மூன்றாவது அகவையில் கால்தடம் பதிக்கிறது.

வாடிக்கையாளர்களின் மனம் வென்று ஒவ்வொரு அம்சத்தையும் பாரியதொரு சேவையாய் வழங்கி சேவை துறையிலும், கல்வித் துறையிலும் அளப்பரிய பணியாற்றி வரும் D2D நிறுவனத்தின் பணியும் பயணமும் மேலும் பல அகவைகள் தொடர வாழ்த்துகின்றோம்.

உரிய வகுப்புக்கள் இன்றி, நாட இடமின்றி, உரிய வழிகாட்டல்கள் இன்றி தவித்துக் கொண்டிருந்த கலை பிரிவு வெளிவாரி பட்டபடிப்பு மாணவர்களுக்கு விடி வெள்ளியாய் தோன்றி பல பட்டபடிப்பு மாணவர்களின் கனவுகளை நனவாக்கிய, இன்னும் பல மாணவர்களின் கனவுகளுக்கு ஊக்கமளித்து கொண்டிருக்கும் D2D யின் சேவை பயணம் மேலும் தொடர வேண்டும். 

வியாபார பணிகளுக்கு அப்பால், கல்வி மற்றும் சமூகம் சார்ந்த பணிகளையும் முன்னெடுத்து சமூக வளர்ச்சிக்கும் தம்மால் இயன்ற பங்கிப்புகளை வழங்கி வரும் D2D நிறுவனத்தின் சமூக பணிகள் எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கப்பட்டு பயனாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும் என்பது எமது அவா!

வாடிக்கையாளர்கள், மாணவர்கள் என சகல தரப்பினரதும் ஆதரவுடன் தொடர்ந்தும் வெற்றி பாதையில் பயணிக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். 

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள. (குறள் எண் : 527)

(அப்ஹம் நிஸாம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.