நாம் இன்பத்தை அனுபவிக்க விரும்பினால், அதன் வலிகளையும் நாம் சகித்துக்கொள்ள வேண்டும்.

நாம் விரும்பியோ விரும்பாமலோ, ஒன்று இல்லாமல் மற்றொன்று இருக்க முடியாது. 

நாம் எதைச் சாதிக்கிறோம் என்பதை வைத்து வெற்றி அளவிடப்படுவதில்லை. நாம் ஒன்றை சாதிப்பதற்கு  எதிர்கொள்ளும் எதிர்ப்புகளை  முகம் கொடுக்கும் முறைகளை வைத்தே வெற்றி அளவிடப்படுகிறது, அதேபோன்று முரண்பாடுகளுக்கு, தடைகளுக்கு, சங்கடங்களுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை தைரியமாக தாண்டுவதன் மூலமம் வெற்றி அளவிடப்படுகிறது.

நாம் சந்திக்கும் எந்த விடயங்களும் எளிதாக இருக்க முன் அது ஆரம்பத்தில் கடினமாக இருப்பதைக் காண்கிறோம்.

நாம் பயணிக்கும் பாதையில் தடைகள் எவ்வளவு அதிகமாக இருக்குமோ, அந்த அளவுக்கு அவற்றைக் கடப்பதில் ஆர்வம் அதிகம் இருக்க வேண்டும்.

எனவே, அயராத உழைப்பும் தியாகமும் பயணத்தின் ஒரு பகுதி என்பதை நம் பயணத்தைத் தொடங்கும் முன்னரே உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சவால்கள் இல்லாமல், வெற்றியும் இல்லை. தடங்கள்கள் தாண்டாமல்  மேன்மையும் இல்லை.

தடைகளை தாண்டாமல், வெற்றியின் இன்பத்தை மகிழ்ச்சியின் சுவையை நாம் ஒருபோதும் உணர மாட்டோம்.

தடைகள் நம் பலவீனங்களை பலமாக மாற்றத் தூண்டுகின்றன, அவற்றிலிருந்து பயப்படுவதற்குப் பதிலாக அவற்றை கடப்பதற்கு தயாராக வேண்டும்.

வெற்றி பெறுவதில் நாம் உள் நம்பிக்கையை உடையவர்களாக இருந்தால் வெற்றிக்கான உறுதியை நாம் பெறுகிறோம். 

தடைகளையும் சவால்களையும் தைரியமாக சந்திப்பதன் மூலம் வெற்றிக்கான பாதை விரிவடைகிறது.  நம்மை சாதனையை நோக்கி அழைத்துச் செல்கிறது.

ஒரு தடையை கடக்க நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றிக்கான பாதையை வலுப்படுத்துகிறது.

இலக்கை அடைவதற்கான ஆற்றல் எம்மிடம் இருக்கிறது என்று நம்புவோம்...!

தடைகள் எங்களை தட்டி பார்க்கும் போது அவற்றை தாண்டுவதற்கான நுட்பங்களை கண்டறிவோம்...!

தடைகளை சந்திக்கும் போது அவற்றில் இருந்து என்ன பாடம் படிக்கலாம் என்று சிந்திப்போம்...!

அவசரமோ ஆவேசமோ இல்லாமல் நிதானமாக செயற்படுவோம்...!

எப்படி இலக்கை அடைவது என்று திட்டமிடுவோம்....!

வெற்றி அடையும் வரை அதற்கு தேவையான அறிவை பெற்று ஆற்றல்களை வளர்ப்போம்.....!

▪️▪️▪️▪️▪️

அஸ்ஹர் அன்ஸார் FRSPH (UK)

மனோதத்துவ ஆலோசனை நிபுணர்

மனோதத்துவ எழுத்தாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.