கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிலால் (MLSC) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மீலாதுன் நபி தின நிகழ்ச்சிகள் நாளை (16) காலை 08.30 முதல் MLSC கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

காலை 08.30 முதல் பிரதேச பாடசாலைகளுக்கு இடையிலான பட்டிமன்றமும், கலாநிதி ரவூப் ஸெய்னின் சிறப்பு பேச்சும் இடம்பெறும்.

அதனை தொடர்ந்து காலை  மௌலவி அல்ஹாஜ் இஜ்லான் காஸிமி தலைமையில் மௌலித் மஜ்லிஸும், பகல்போஷணமும் இடம்பெறும்.

மாலை 03.45 முதல் கவிஞர் கிண்ணியா அமீர் அலி தலைமையில் மீலாதுன் நபி சிறப்புக்கவியரங்கமும், அதனை தொடர்ந்து அஷ்ஷெய்க் நூருல்லாஹ் நளீமி தலைமையில் பரிசளிப்பு விழாவும், நூலக மீள் திறப்பு நிகழ்ச்சியும் இடம்பெறும்.

நிகழ்ச்சிகளின் முக்கிய அம்சங்கள் சியன ஊடக வட்டத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் (Facebook.com/Siyanemediacircle) நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.