கடந்த வார இறுதியில் புத்தளம் - சிலாபம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பிச்சைக்காரர் ஒருவரிடம் 1 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பணம் மற்றும் அவரது பெயரில் ஐந்து வங்கிக் கணக்கு புத்தகங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் - சிலாபம் வீதியில் உள்ள அனவிலுந்தவ பகுதியில் கடந்த சனிக்கிழமை (05) மோட்டார் சைக்கிளில் மோதியதில் உடப்புவ பிரதேசத்தைச் சேர்ந்தவரே  (வயது 49)  உயிரிழந்துள்ளார்.

அனவிலுந்தாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (6) உயிரிழந்துள்ளார்.

அவரது பையை சோதனை செய்ததில் 1இலட்சத்து, 35ஆயிரம் பணம் மற்றும் அவரது வங்கி கணக்கில் 47 ஆயிரம் பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளில் அவர் பல வருடங்களாக பிச்சைக்காரராக வாழ்ந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.கிர்த்திபால மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.