வெப்பமான காலநிலை காரணமாக இந்த ஆண்டு ஐரோப்பாவில் இதுவரை 15,000 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்பெயினில் 4,000 இறப்புகளும், போர்த்துக்கலில் 1,000 இறப்புகளும், ஐக்கிய இராச்சியத்தில் 3,200 இறப்புகளும், ஜெர்மனியில் 4,500 இறப்புகளும் பதிவாகியுள்ளன என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவுக்கான பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் தெரிவித்தார்.

மேலும் பல நாடுகளில் வெப்பம் காரணமாக உயிரிழப்புகள் தொடர்வதாகவும், எதிர்காலத்தில் இந்த உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மூன்று மாத காலப்பகுதி ஐரோப்பாவில் அதிக வெப்பமான காலகட்டமாக காணப்பட்டதுடன், இந்த அதிக வெப்பம் கண்டத்தில் மிக மோசமான வறட்சியை ஏற்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.