இங்கிலாந்தை 221 ஓட்டங்களால் வென்றது அவுஸ்திரேலியா: ட்ரவிஸ் ஹெட், டேவிட் வோர்ணர் சதங்கள் குவிப்பு*

*———-———-———*
*Mawanella News🌤*
*22 November 2022*
*Tuesday🌎*
*———-———-———*

இங்கிலாந்துடனான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 221 ஓட்டங்களால் வென்றது.

மெல்பேர்னில் இன்று நடைபெற்ற இப்போட்டி மழை காரணமாக 48 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 48 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 355 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ட்ரவிஸ் ஹெட், 130 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 16 பவுண்டறிகள் உட்பட 152 ஓட்டங்களைக் குவித்தார். மற்றொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்ணர் 102 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டறிகள் உட்பட 108 ஓட்டங்களைக் குவித்தார். 

இவ்விருவரும் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 269 ஓட்டங்களைக் குவித்தமை குறிப்பிடத்தக்கது

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடி இங்கிலாந்து அணி31,4  ஓவர்களில் 142  ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

அடம் ஸம்பா 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் அவுஸ்திரேலியா 3:0 விகித்தத்தில் வென்றுள்ளது.

இத்தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட்களாலும் 2 ஆவது போட்டியில் 72 ஓட்டங்களாலும் அவுஸ்திரேலியா வென்றிருந்தது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.