அரச ஊழியர்களின் விளையாட்டு சங்கத்தினால் நடத்தப்படும் வருடாந்த விளையாட்டு போட்டியின் கிரிகெட் போட்டிகள் 28ம் திகதி திங்கள் முதல் புதன் வரை நாரஹேன்பிட ஸாலிகா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

மினுவங்கொடை கல்வி வலயம் சார்பில்  அல்அமான் முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர்கள் எட்டுப்பேர்  பங்கேற்றனர்.

அறுபத்து நான்கு அரச நிறுவனங்களின்  அணிகள் கலந்து கொண்டன.
 
முதலாம் நாளில் 43 ஒட்டங்களுக்குள் ஹோரன MOH அணியை கட்டுப்படுத்தி, இலகுவாக வெற்றி பெற்ற மினுவங்கொடை கல்வி வலய, அல்அமான் அணி இரண்டாம் நாளில் பொதுச் சேவை ஆணைக்குழு அணியினரிற்கு எட்டு ஒவரில் 117 இலக்கினை வழங்க, 82 ஒட்டங்களால் வெற்றிபெற்றனர்.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் key playerராய்  தனியொருவராக 53 ஒட்டங்களை விளாசிய ஆரம்ப ஆட்டக்காரரும், ஒரு ரன்னிற்கு ஒரு ஒட்டமே வழங்கி வெற்றியோடு ஆட்டத்தை முடித்து வைத்த முக்கிய வீரரும் மாலையில் வீடு திரும்பும் போது கந்தானையில் நடந்த விபத்தில் காயமடைந்த நிலையில்  இறுதி நாள் போட்டிகளுக்காக இன்றைய தினம் தயாராகினர்.

இன்றைய தினம் முழுமையாக இளம் வீரர்களைக் கொண்ட பலம்வாய்ந்த இலங்கை சிறைச்சாலைகள் திணைக்கள அணியினருடன் கடுமையாகப் போராடி துரதிஷ்டவசமாக போட்டியிலிருந்து வெளியேறினர்.

முதல்தடவையாக இச்சுற்றுப் போட்டியில் பங்கேற்று சிறப்பாகப் பிரகாசித்த  மினுவங்கொடை கல்வி வலய, அல்அமான் அணியினரிற்கு வாழ்த்துக்கள்.

Ubaidullah, Faiz, Sasreen, Zamry, Hiflullah, Fasool, Nafwan, Safwath, Rislan, ImalkaSurange, Janaka Mayura


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.