2023 இல் மிக நீண்ட மின்வெட்டு – இலங்கை மின்சார சபை


அடுத்த வருடம் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு முன்னர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கிடைக்காவிட்டால், 2023 ஜூலைக்குள் வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு சந்திக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்,

எமது நாட்டுக்கு 60,000 மெற்றிக் தொன் நிலக்கரி ஏற்றிச் செல்லும் 38 கப்பல்கள் தேவைப்பட்ட போதிலும், நாட்டுக்கு 4 கப்பல்களே கிடைத்துள்ளன.

ஐந்தாவது கப்பலுக்கு துறைமுகத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டன.கப்பல் வர தாமதமாகும்.இந்த 38 கப்பல்களும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் வரவில்லை என்றால் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெரிய அளவில் மின்வெட்டு ஏற்படும்.

லக்விஜய மின் உற்பத்தி நிலையம் நாட்டின் மின்சாரத் தேவையில் 45% வழங்குகிறது. 

இப்போது நிலக்கரி கிடைக்கவில்லை என்றால், மற்ற அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்கினால், செலவு மிக அதிகமாக இருக்கும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.